Nagaratharonline.com
 
காசியில் பிரதிஷ்டை செய்ய400 பவுன் சொர்ணலிங்கேஸ்வரர் சிலை  Feb 13, 11
 
 
காசியில் பிரதிஷ்டை செய்வதற்காக, காசி நாட்டுக்கோட்டை நகர சத்திர மேலாண்மை கழகத்தாரால் 400 பவுன் தங்கத்தால் செய்யப்பட்ட, காசி சொர்ணலிங்கேஸ்வரர் சிலைக்கு, பிள்ளையார்பட்டியில் நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது.

காசியில் நகரத்தார் சத்திரம் உண்டு. இங்கு, தங்கத்தாலான விசாலாட்சி சுவாமி உள்ளது. இதன் அருகே லிங்கேஸ்வர சுவாமியை பிரதிஷ்டை செய்வதற்காக, இச்சமூகத்தினரால் வழங்கப்பட்ட நிதி, தங்க பொருட்களை கொண்டு சுவாமி சிலை தயாரிக்கும் பணி நடந்தது. நன்கொடையாக வந்த 400 பவுன் தங்கத்தில், 3.5 கிலோ எடையில், "காசி சொர்ணலிங்கேஸ்வரர்' சுவாமி சிலை தயாரானது.

இந்த சிலையை ஒன்பது நகரத்தார் கோயில்கள், 76 நகரத்தார் ஊர்களில் உள்ள சிவன்கோயில்களுக்கு எடுத்து சென்று, தரிசிக்க முடிவு செய்தனர்.இதற்காக, நேற்று பிள்ளையார்பட்டி கோயிலில், தங்கத்தால் ஆன சிவனுக்கு, பிச்சை குருக்கள் அபிஷேகம் செய்தார். பின், ஒவ்வொரு நகரத்தார் ஊர்களுக்கும் எடுத்து செல்லப்படுகிறது.

கழக செயலாளர் ராஜகோபால், உதவி செயலாளர் முத்துபழனியப்பன் கூறுகையில், "நகரத்தார் கோயில், ஊர்களுக்கு பிப். 23ம் தேதி வø சிலை எடுத்து செல்லப்படும். மார்ச் 2ம் தேதி சிவராத்திரியன்று காசிக்கு கொண்டு செல்லப்படும். அங்கு, விசாலாட்சி அம்மனுக்கு அருகில் பிரதிஷ்டை செய்யப்படும்,' என்றனர்.

source : Dinamalar
photo source:csenthilnathan @ hotmail.com