Nagaratharonline.com
 
தேவகோட்டையில் சுகாதாரக்கேடு : 'சிக் குன்- குனியா' அபாயம்  Oct 29, 09
 
தேவகோட்டை : தேவகோட்டையில் சுகாதாரக்கேடு நிலவுவதால் "சிக் குன்- குனியா' அச்சம் ஏற்பட்டுள்ளது.
இங்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் "சிக் குன்- குனியா' தாக்கிய போது ப�லர் பாதிக்கப்பட்டனர். தற்போதும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. கடும் சுகாதார கேடால் மக்கள் அவதிப்படுகின்றனர். கருதாவூரணி உட்பட சில ஊரணிகளில் கழிவுநீர் கலப்பதை நகராட்சியினர் கண்டுகொள்ளவில்லை. நகர் முழுவதும் சாக்கடை தேங்கி கொசுத்தொல்லை, பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. "சிக் குன் குனியா' வுக்கு கொசுக்கள் தான் காரணம் என அறிந்தும் சுகாதார பிரிவினர் அலட்சியமாக உள்ளனர். துப்புரவு பணியை தனியாரிடம் கொடுத்தும் சுகாதாரக்கேடு அதிகரித்து வருகிறது. நகராட்சி தலைவர் வார்டிலேயே கழிவுநீர் தேங்கியுள்ளது.
பரவும் காய்ச்சல்: இங்கு சில வாரங்களாக வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் "சிக் குன்- குனியா' அச்சத்தில் மக்கள் தவிக்கின்றனர். கொசு மருந்து அடித்து பல மாதம் ஆகிவிட்டது. மக்களின் அச்சத்தை போக்க கொசு ஒழிப்பு பணிகளில் நகராட்சியினர் தீவிரம் காட்ட வேண்டும். நோய் தாக்குதல் அதிகரித்த பின் பிரசார நோட்டீஸ், விழிப்புணர்வு நிகழ்ச்சி என செலவு கணக்கு எழுதாமல் வரும் முன் தடுக்க வேண்டும்.

Source Dinamalar 29/10/ 09