Nagaratharonline.com
 
NEWS REPORT: மூலம் நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாதா ?  Jan 29, 11
 
ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்:

கடந்த வாரத்தில் என்னிடத்தில் ஒருவர் வந்திருந்தார். அவர் மூலம் நட்சத்திரம். அவருடைய பையனும் மூலம் நட்சத்திரம். "ஆனி மூலம் அரசாளும், பின் மூலம் நிர்மூலம்". அதாவது ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தால் அவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் நல்ல நிலைக்கு வருவார்கள். பின் மூலம் நிர்மூலம், மூலம் நட்சத்திரம் 4ஆம் பாகத்தில் பிறக்கக் கூடியவர்கள் எதிரிகளை வெற்றி காணக்கூடிய சக்தி, நிர்மூலமாக்குவது என்று சொல்வார்களே, பிரச்சனைகளை நிர்மூலமாக்குவது போன்ற சக்திகளெல்லாம் உண்டு.

இது காலப் போக்கில் என்னவானதென்றால், "ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்" என்று ஆகிவிட்டது. இது தவறு. அதே மாதிரி, மூலம் நட்சத்திரம் உள்ளவர்கள் என்னிடத்தில் எவ்வளவோ பேர் வருகிறார்கள். அவர்களிடத்தில், தைரியமாக பெண்ணைக் கொடுங்கள். அல்லது மாப்பிள்ளை மூலம் நட்சத்திரம் என்றால் தாராளமாக ஏற்றுக்கொள்ளுங்கள். மாமனாருக்கு ஆகாது என்பதெல்லாம் பொய். அதுபோன்று எதுவும் கிடையாது என்று சொல்லி அனுப்புவேன்.

source : webdunia