Nagaratharonline.com
 
பழநி பாதயாத்திரை பக்தர்களை பதம்பார்க்கும் முட்செடிகள்  Jan 17, 11
 
கொட்டாம்பட்டி வழியாக பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களை ரோட்டின் இருபுறமும் உள்ள முட்செடிகள் பதம் பார்க்கின்றன.

கொட்டாம்பட்டி வழியாக காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, துவரங்குறிச்சி, விராலிமலை உள்ளிட்ட ஊர்களிலிருந்து பழநிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். கொட்டாம்பட்டி ஊரை கடந்தவுடன் இருபுறமும் புதராக மண்டிக் கிடக்கும் முட்செடிகள் பக்தர்களின் உடலில் காயங்களை ஏற்படுத்துகின்றன.

மணப்பச்சேரி, வெள்ளா ளபட்டி, சமுத்திராபட்டி வரை ரோடு குறுகலாக உள்ளதால் வாகனங்களுக்கு வழிவிட்டு பக்தர்கள் ரோட்டை விட்டு இறங்கி மண் பாதையில் நடக்கின்றனர். அவ்வாறு நடப்பவர்களின் ஆடைகள் மற்றும் உடம்பை இம்முட்செடிகள் கிழிக்கின்றன. இதனைத் தடுக்க கொட்டாம்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையம் அருகே நான்கு வழிச் சாலை பிரியும் இடத்தில் பாதயாத்திரை பக்தர்கள் செல்லும் வழி என்று போர்டு வைத்தால் பக்தர்கள் அவ்வழியில் செல்ல உதவியாக இருக்கும். விபத்துக்களும் தவிர்க்கப்படும்.

எனவே, சம்பந்தப்பட்டஅதிகாரிகள் முள் செடிகளை அகற்றிடவும், பக்தர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.

source : Dinamalar