Nagaratharonline.com
 
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.54 உயர்வு  Jan 15, 11
 
இந்தியன் ஆயில் நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.50ம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் லிட்டருக்கு ரூ.2.54ம், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ரூ.2.53ம் உயர்த்தின. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது.

கடந்த டிச., 15 ல் தான் 3 பொதுத் துறை நிறுவனங்களும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.96 வரை உயர்த்தின. இந்நிலையில், ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக நேற்று பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோல் மீதான விலை நிர்வாக கட்டுப்பாட்டு முறையை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு கைவிட்டது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம், உள்நாட்டில் பெட்ரோலிய நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்திக் கொள்ளலாம். ஆனாலும், பெட்ரோலிய அமைச்சகத்துடன் ஆலோசித்த பிறகே விலை உயர்த்தப் படுகிறது.



மதுரையில் ஒரு லிட்டர் 63.45 ரூபாய்: மதுரையில் நேற்றிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.75 ரூபாய் உயர்ந்தது. பழைய விலை ஒரு லிட்டர் ரூ.60.70. புதிய விலை 63.45 ரூபாய். டிச. 15 ல் மதுரையில் பெட்ரோல் லிட்டருக்கு 3.19 ரூபாய் உயர்ந்தது. கடந்த ஒரு மாதத்திற்குள் இருமுறையாக 5.94 ரூபாய் உயர்ந்துள்ளது.

source : Dinamalar