Nagaratharonline.com
 
மஞ்சுவிரட்டு :ஒன்பது இடங்களில் "செக் போஸ்ட்'  Jan 15, 11
 
பாரம்பரிய ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்துவதில் கிராமத்தினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோர்ட் அறிவுரைப்படி, நடத்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு கெடுபிடியை போலீஸ் நிர்வாகம் விதித்துள்ளது.

மாவட்டத்தில் சிறாவயல், அரளிப்பாறை, கண்டிப்பட்டி, எம்.புதூர், என்.புதூர், கண்டரமாணிக்கம், நெடுமரம் உட்பட 127 கிராமங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடக்கிறது. இதற்கான மைதானங்களை தயார்படுத்தும் பணியில் கிராமத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதில், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்கும்.

அனுமதி: ஜன.,17 அன்று சிறாவயல், 20 ல் கண்டிப்பட்டி என மஞ்சுவிரட்டு தொடர்ச்சியாக நடக்கும். விலங்குகள் நல வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, கோர்ட் கடும் நெருக்கடி கொடுத்துள்ளது. காளைகள், அதை அடக்கும் வீரர்களை உரிய முறையில் மருத்துவ பரிசோதனை; மாடுகள்முட்டி இறந்தால், வீரர்கள் குடும்பத்திற்கு இன்ஸ்
சூரன்ஸ் என நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி நடத்த சம்மதம் தெரிவித்துள்ள சிறாவயல், கண்டிப்பட்டி உள்ளிட்ட ஏழு இடங்களில் மட்டுமே மஞ்சுவிரட்டு நடத்த, அரசு அனுமதித்துள்ளது


source : Dinamalar