Nagaratharonline.com
 
சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: சட்ட மசோதா நிறைவேற்றம்  Jan 13, 11
 
சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்கம் குறித்த சட்ட மசோதா, சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை மாநகரை அடுத்துள்ள 42 உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ப்பதன் மூலம் சென்னை மாநகராட்சியின் எல்லைகளை விரிவாக்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ப்பதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சிக்கு நடத்தப்படவிருக்கிற, அடுத்த வழக்கமான தேர்தலுக்காக சிற்றொகுதிகள் (கோட்டங்கள்) சீரமைப்பு செய்யப்படும்.

விரிவாக்கத்தின் பொருட்டு, சென்னை மாநகராட்சிக்கான சிற்றொகுதிகளின் (கோட்டங்களின்) மொத்த எண்ணிக்கையை இரு நூறு என்பதாக நிர்ணயிப்பதென முடிவு செய்துள்ளது.

அதன்படி 1919-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டத்தில் சிற்றொகுதிகளின் (கோட்டங்களின்) எண்ணிக்கையைச் சுட்டுகிற வகையில் அமைந்த ஒருசில வகைமுறைகள் திருத்தப்படுவது தேவையானதாகிறது.

அதனடிப்படையில், 2010-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்த) அவசர சட்டமானது (தமிழ்நாடு அவசர சட்டம்), 2010-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டு, டிசம்பர் 21-ம் தேதி தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில் வெளியிடப்பட்டது. இந்த மசோதாவை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார். பின்னர் இது நிறைவேற்றப்பட்டது



source : Dinamani