Nagaratharonline.com
 
திருப்பரங்குன்றம் கோயிலில் 5 கிலோவில் தங்க வேல் : உலகில் அதிக எடையுடையது  Jan 13, 11
 
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐந்து கிலோவில் உலகிலேயே அதிக எடையுள்ள தங்க வேல் செய்யும் பணி நிறைவடைந்ததுமூலவர் சுப்பிரமணிய சுவாமி, மலையின் அடிவாரத்தில் குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளதால், அவரது கரத்தில் நான்கரை அடி உயரத்தில் உள்ள தங்கமுலாம் பூசப்பட்ட தாமிர வேலுக்கு, அனைத்து அபிஷேகங்களும் நடக்கிறது.



புதிய தங்க வேல்: அந்த வேலுக்கு பதிலாக முற்றிலும் தங்கத்தால் ஐந்து கிலோ எடையில், புதிய வேல் செய்ய நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக நான்கு கிலோ 600 கிராம் சொக்கத்தங்கம், மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து, 93 லட்சத்து 97 ஆயிரத்து 800 ரூபாய் விலை கொடுத்து, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் விலைக்கு வாங்கினர். அத்துடன் 400 கிராம் தாமிரம் சேர்த்து ஐந்து கிலோ எடையில் நான்கரை அடி உயரத்தில் புதிய தங்க வேல் செய்யும் பணி நேற்றுமுன்தினம் நிறைவடைந்தது.



கோயில் துணை கமிஷனர் செந்தில் வேலவன் கூறுகையில், ""கோயில்களில் சுவாமிக்கு, முழுவதும் தங்கத்தில், (ஐந்து கிலோ) வேல் செய்யப்படுவது உலகில் இதுதான் முதல்முறை. மூலவர் கரத்தில் புதிய தங்க வேல் சாத்துப்படியாகும் விழா விரைவில் நடக்க உள்ளது என்றார்''.


source : Dinamalar