Nagaratharonline.com
 
தித்திக்கும் பொங்கல்; திகைக்க வைக்கும் விலை  Jan 13, 11
 
நாளை பொங்கல். எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு பலசரக்கு, காய்கறி உட்பட உணவுப்பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. விலை அதிகமாக இருந்தாலும், மக்களின் வாங்கும் ஆர்வம் மட்டும் குறையவில்லை. இந்தாண்டும் பொங்கல் பண்டிகை களைகட்டுகிறது. பண்பாட்டை பறைசாற்றும் பொங்கல் கொண்டாட்டத்திற்கு உற்சாகத்துடன் தயாராகி விட்டனர் மக்கள். சமீபத்தில் பெய்த மழையால், உற்பத்தி குறைந்து, எப்போதும் இல்லாத அளவிற்கு அனைத்து உணவுப்பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ பெல்லாரி வெங்காயம் 90 ரூபாய் வரை விற்கப்பட்டது.



தக்காளி 50 ரூபாய்க்கு உயர்ந்தது. மழை ஓய்ந்து, பொங்கல் பண்டிகைக்காக காய்கறி வரத்து அதிகரித்த போதும், விலை குறையவில்லை. அதேபோல், பொங்கலுக்குரிய கரும்பு, மஞ்சள் கிழங்கு, தேங்காய் விலையும் அதிகரித்துள்ளது. வாங்குவோரின் எண்ணிக்கை குறையாவிட்டாலும், வாங்கும் காய்கறிகளின் அளவு குறைந்துவிட்டது. "பொங்கலோ தித்திக்கிறது; அதற்கு தேவையான பொருட்களின் விலை திகைக்க வைக்கிறது,' என்கின்றனர், குடும்பத் தலைவிகள்


source : Dinamalar