Nagaratharonline.com
 
கீழச்சிவல்பட்டி நகரில் குறைந்த அழுத்த மின் விநியோகம்  Jan 12, 11
 
திருப்பத்தூர் அருகே உள்ள கீழச்சிவல்பட்டி குறிஞ்சி நகரில் குறைந்தழுத்த மின் விநியோகத்தால் அப்பகுதியினர் அவதிப்படுகின்றனர்.

கீழச்சிவல்பட்டி குறிஞ்சி நகரில் சுமார் 200 மின் இணைப்புகள் உள்ளன. இங்கு கடந்த ஓராண்டாக குறைந்தழுத்த மின் விநியோகம் செய்யப்படுவதால், அனைத்து மின் சாதனங்களையும் இயக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். சில இடங்களில் மின் விளக்கு எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

இது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அப்பகுயில் உள்ள் மின்மாற்றியை சரிசெய்வதற்கு மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும், மின் விநியோகம் சீரடையவில்லை.

source : Dinamani

இப்பகுதியில் மின்வாரியத்தினர் ஆய்வுசெய்து, சீரான மின் விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.