Nagaratharonline.com
 
கண்டவராயன்பட்டியில் நாளை முப்பெரும் விழா  Oct 23, 09
 
கண்டவராயன்பட்டி, அக்.22: சிவகங்கை மாவட்டம் கண்டவராயன்பட்டி தெ.சி.நா. குடும்பத்தாருக்குச் சொந்தமான அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலில் சனிக்கிழமை (அக்.24) மாலை 5-30 மணிக்கு 4-ம் ஆண்டு கந்த சஷ்டி லட்சார்ச்சனை, வரலாற்றுக் கல்வெட்டுத் திறப்பு, "கலைஞர் விருது' பெற்ற குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்குப் பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெறுகின்றன.

நா.சி.சொ. சிவசுப்பிரமணியன் செட்டியார் தலைமை வகிக்கிறார். சே. சொக்கலிங்கம் வரவேற்கிறார். கல்வெட்டைத் திறந்துவைத்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சிறப்புரையாற்றுகிறார். அரு. சோமசுந்தரன் பாராட்டு வழங்குகிறார். சுப. தேனப்ப செட்டியார், நா.சி.சொ. செந்தில்நாதன், அ. வல்லநாட்டான், ராம. தேனப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். சே. குமரப்பன் நன்றி கூறுகிறார்.

இக் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. 1946-ம் ஆண்டு இக் கோயில் முன்பாக கம்பன் அடிப்பொடி சா. கணேசன் தலைமையில் ஆங்கிலேயர்களை எதிர்த்து விடுதலை முழக்கமிட்டு கொடி ஏற்றப்பட்டது. 1947-ம் ஆண்டு பூங்குன்ற நாட்டு விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. 1948-ம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் பி.எஸ். குமாரசாமி ராஜா தலைமையில் ஹரிஜன ஆலயப் பிரவேசம் நடந்தது. 1965-ம் ஆண்டு வினோபா பாவே இக் கோயிலுக்கு வருகை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

source : Dinamani 23/10/09