Nagaratharonline.com
 
திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலத்தை ஒருவழிப்பாதையாக மாற்ற சோதனை ஓட்டம்  Jan 7, 11
 
திருச்சி ஜங்ஷனில் ரயில்வே மேம்பால போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், அதை ஒரு வழிப்பாதையாக மாற்றும் சோதனை ஓட்டம் நேற்று துவங்கியது.

அதன்படி, ஜங்ஷன் ரயில்வே மேம்பாலத்தை ஒருவழிப்பாதையாக மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதாவது விராலிமலை, கே.கே.நகர், புதுக்கோட்டை, சென்னை ஆகிய மார்க்கங்களிலிருந்து ஜங்ஷன், சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் வரும் வாகனங்கள் மட்டும் வரலாம். மீண்டும் அந்த வழியாக செல்ல முடியாது.இவ்வளவு நாட்கள் மேம்பாலம் வழியாக விராலிமலை, கே.கே.நகர், பொன்மலை, கீரனூர், புதுக்கோட்டை ஆகிய மார்க்கம் வழியாக சென்று கொண்டிருந்தவர்கள் தற்போது தலைமை தபால் நிலையம், டி.வி.எஸ்., டோல்கேட் வழியாக செல்ல வேண்டும். புதிய திட்டப்படி ஜங்ஷன் மேம்பாலத்தை ஒருவழியாக்குவதை நடைமுறைப்படுத்த வசதியாக நேற்று முதல் சோதனை முயற்சி துவங்கியது

.நேற்று காலையில் இரண்டு மணிநேரமும், மாலையில் இரண்டு மணிநேரமும் கனரக வாகனங்களை புதிய திட்டப்படி ஜங்ஷன் மேம்பாலம் வழியாக செல்ல அனுமதிக்கவில்லை. டூவீலர், ஆட்டோ, கார், வேன்கள் அனுமதிக்கப்பட்டது.இந்த சோதனை ஓட்டம் இன்னும் ஒரு வாரகாலம் அமலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் ஒரு வழிப்பாதைக்கான வரவேற்பை பொறுத்து திட்டத்தை செயல்படுத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

source : Dinamalar