Nagaratharonline.com
 
இலங்கை செல்பவர்களுக்கு அரசு வேண்டுகோள்  Jan 6, 11
 
இலங்கையில் தற்போது பன்றிக்காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்நாட்டிற்கு பயணம் செய்பவர்கள் அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தமிழக அரசு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பயணிகளுக்கு காய்ச்சல், இருமல், தும்மல், தொண்டைப்புண் உள்ளிட்ட பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் இலங்கை பயணத்தை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்.

பயணத்தின்போது பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஏஎச்1என்1 நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இலங்கையில் பயணம்செய்யும்போது பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகளினால் பாதிக்கப்பட்டால் அருகில் உள்ள இலங்கை அரசு மருத்துவமனையை அணுகி நோய்க்கான சிகிச்சை பெற்றுக்கொள்ளவும்.

இலங்கைக்கு பயணம் செய்யத் தொடங்குவதற்கு 2-3 வாரங்களுக்கு முன்பு ஏஎச்1என்1 நோய்க்கான தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளவும். இந்த நோய்க்கான தடுப்பு ஊசி சலுகை விலையில் கிண்டி கிங் நிலையத்தில் வழங்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


source : Chennai livenews