Nagaratharonline.com
 
வெங்காயம் விலை சரிவு: மக்கள் மகிழ்ச்சி  Dec 24, 10
 
வெங்காயம் விலை கிலோவுக்கு 30 ரூபாய் சரிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில், கர்நாடகா, மகாராஷ்டிரா பகுதிகளிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பெல்லாரி வெங்காயம் வரத்துள்ளது. வடகிழக்கு பருவமழை சீசன் காரணமாக, வட மாநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம் அதிகளவில் சேதமடைந்தது.இதனால், போதிய வரத்து இல்லாததால், பெல்லாரி வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 80 ரூபாய் வரை விலை போனது

வரும் வாரங்களில், வெங்காயம் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், விலையில் சரிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்றனர்.


source : Dinamalar