Nagaratharonline.com
 
பெங்களூர்-மைசூர் செல்ல “ஆன்லைன்” டிக்கெட் புக்கிங்  Dec 16, 10
 
கோவையில் இருந்து கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 30 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் 6 வால்வோ பஸ்களிலும், 3 ராஜஅம்சா பஸ்சும், 1 சிலிப்பர் பேருந்தும், 20 எக்ஸ்பிரஸ் பஸ்களும் அடங்கும். மைசூர், பெங்களூர், மங்களூர், சிருங்கேரி, ஷிமோகா, சிக்மகளூர், தேவநேகரி, தும்கூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் மைசூர் பெங்களூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது.

பயணிகளுக்கு கூடுதல் வசதி செய்யும் பொருட்டு முதல் முறையாக ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையை அறிமுகப் படுத்தி உள்ளோம். 15-ந்தேதி (இன்று) மாலையில் நடக்கும் அறிமுக விழாவில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கை கோவை மாநகர கமிஷனர் அன்சுல்மிஸ்ரா தொடங்கி வைக்கிறார். இதை பயணிகள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


source ; Maalaimalar