Nagaratharonline.com
 
தேவாரம், திருவாசகம் ஓப்பித்தல் போட்டி  Dec 15, 10
 
திருப்பத்தூர், டிச. 14: திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில், திருமுறை மன்றத்தின் சார்பில் தேவாரம், திருவாசகம் ஓப்பித்தல் போட்டி நடைபெற்றது.

திங்கள்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டிக்கு, காசி நகர சத்திர மேலாண்மைக் கழக தலைவர் சி.டி.எஸ்.சிதம்பரம் தலைமை தாங்கினார். திருமுறை மன்ற அமைப்பாளர் தே.ராஜேந்திரன் அறிமுகவுரையாற்றினார்.

பின்னர் நடைபெற்ற தேவாரம், திருவாசகம் ஓப்பித்தல் போட்டி மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. 6 மற்றும் 7 வகுப்புகளுக்கு நடத்தப்பட்ட போட்டியில் முதலிடத்தை சாத்தப்பன் பெற்றார். 2, 3 ஆம் இடத்தை வெங்கடகிருஷ்ணன், அழகம்மை ஆகியோர் பெற்றனர்.

இரண்டாம் பிரிவான 8 மற்றும் 9 வகுப்புகளுக்கு நடைபெற்ற போட்டியில் முதலிடத்தை நாராயணனும், 2 மற்றும் 3 ஆம் இடத்தை தவமணி, வெங்கடேஷன் ஆகியோரும் பெற்றனர்.

மூன்றாம் பிரிவுக்கான போட்டியில் முதலிடத்தை ஆரியப்பனும், 2, 3 ஆம் இடத்தை சுப்பிரமணி, சுபா ஆகியோரும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

போட்டியின் நடுவர்களாக சொக்கலிங்கம், தஞ்சை சோமசுந்தரம், எம்.ராசாமி, மீனா ராஜேந்திரன், ஆசிரியர்கள் பாலநடராஜன், மெய்யாண்டவர், வெங்கடசுப்பிரமணியன், வாசு, அழகர்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜன் வாழ்த்திப் பேசினார். மீனா ராஜேந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டை தமிழாசிரியர்கள் செய்திருந்தனர்

Source:Dinamani