Nagaratharonline.com
 
மிதிலைப்பட்டியில் மழையால் வெளியேறும் மலைப்பாம்புகள்  Dec 4, 10
 
தொடர் மழையால் பிரான்மலையில் இருந்து மலைப்பாம்புகள் இடம் பெயர்ந்து வருகின்றன. மணிமுத்தாறு, பாலாறு, விருசுழி ஆற்றில் தொடர் மழையின் போது மட்டும் நீர் வரத்து இருக்கும். மழையில் பாம்புகள் இடம்பெயறும். ஆற்று நீரில் வரும் இவை, வழி கிராமங்களில் தஞ்சம் அடைகின்றன. அதில் "இந்தியன் ராக்' என்பவை நீரிலும் வாழக்கூடியவை. வங்கணத்தி எனும் வகையும் இங்கு உள்ளன. பிரான்மலைக்கு மேற்புறம் உலகம்பட்டி அருகே கண்மாயில் இந்த பாம்புகள் கடந்த ஆண்டு பிடிபட்டன. நேற்று மிதிலைப்பட்டியில் 9 அடி, நெடுமரத்தில் 12 அடி நீள பாம்புகள் பிடிபட்டன. வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட இவை, பூலாங்குறிச்சி, மதகுபட்டி மண் மலையில் விடப்பட்டன. கடந்த ஆண்டில் 40 க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிபட்டு, மலைப்பகுதிகளில் விடப்பட்டன.


source : Dinamalar