Nagaratharonline.com
 
பட்டமங்கலத்தில் குருப் பெயர்ச்சி விழா  Nov 23, 10
 
திருப்பத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப் பெயர்ச்சி விழா நடைபெற்றது.

பட்டமங்கலம் தட்சணாமூர்த்தி கோயிலில் குருப் பெயர்ச்சியை முன்னிட்டு நவ.21-ம் தேதி இரவு 11 மணிக்கு சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது.

குருபகவான் கும்பராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சியானார். குருப் பெயர்ச்சியை முன்னிட்டு பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தட்சிணாமூர்த்தி ஐம்பொன்னால் ஆன ஆல விருட்சத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி உற்சவராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை சிறப்பு ஹோமம் நடைபெற்றது. மூலவருக்கு தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் நடை சாத்தப்பட்டது. நவ. 22-ம்தேதி திங்கள்கிழமை காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டுதட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் நடைபெற்றது. குருப் பெயர்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தியை வழிபட்டனர்.

source : Dinamani