Nagaratharonline.com
 
திருப்பதி கோயிலில் தரிசனம் : மதுரையில் "இ-புக்கிங்' வசதி நாளை துவக்கம்  Nov 22, 10
 
மதுரை:திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய "இ-தர்ஷன்' டிக்கெட் புக்கிங் மையம், மதுரையில் நாளை துவக்கப்பட உள்ளது.மதுரை தபால் தந்திநகர் செல்லும் வழியில், ஜெ.என்.நகர் 3வது தெரு கடைசியில் உள்ள திருமலை நகரில் இதற்கான கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மதுரை ஆடிட்டர் கோபாலகிருஷ்ணன்- சேதுலட்சுமி தம்பதியினர் வழங்கிய 2 ஏக்கர் நிலத்தில், 2200 ச.அடியில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. திருப்பதி கோயிலின் தமிழக மக்கள் தொடர்பு அலுவலர் டி.ஹரிதேவகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் 9வது இ-தர்ஷன் புக்கிங் மையம் மற்றும் தகவல் மையத்தை மதுரையில் நாளை (நவ. 23) காலை 10 மணிக்கு கோயிலின் செயல் அலுவலர் கிருஷ்ணாராவ் துவக்கி வைக்க உள்ளார். கூட்டத்தில் நீண்ட நாள் காத்திராமல்,வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய விரும்புவோர், இ-தர்ஷன் முறையில் டிக்கெட்டுகளை புக் செய்யலாம்.



இதில், பக்தர்களின் "விரல் ரேகையை' பதிவு செய்ய வேண்டும் என்பதால், தரிசனம் செய்வோர் அனைவரும் இங்கு நேரடியாக வர வேண்டும். தினமும் காலை 9 முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 2 முதல் 4 மணி வரையும் முன்பதிவு செய்யலாம். சனி, ஞாயிறு நாட்களில் மட்டும் வழக்கமான நேரத்துடன், இரவு 7 மணி வரை புக் செய்யலாம். 5 நாள் முதல் மூன்று மாதம் முன்பு வரை புக் செய்யலாம். செவ்வாய் விடுமுறை.

source : Dinamalar