Nagaratharonline.com
 
சாலை விதிகளை மீறுவோர் ஆன்லைனில் அபராதம் செலுத்தலாம்  Nov 21, 10
 
சென்னையில் 216 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் நிறுவப்பட்டுள்ளன. இப்போது மேலும் 25 இடங்களில் சிக்னல்கள் நிறுவப்பட்டுள்ளன. உலக வங்கியின் நிதியுதவி திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் 17 சிக்னல்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்தைச் சுற்றியுள்ள சிக்னல்களில் எச்சரிக்கை விளக்குகள் தானியங்கி முறையில் நிறுவப்பட்டுள்ளன. சாலை விதிகளை மீறுவோருக்கு போலீஸார் அனுப்பும் சம்மனில், விதி மீறல் காட்சி இடம் பெறும் வகையில் அச்சிட்டு விநியோகிக்கப்படும்.

இந்த ஆண்டு இதுவரை போக்குவரத்து விதிகளை மீறியது தொடர்பாக 9.16 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7.74 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக இதுவரை 18 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரகசிய கேமராக்களின் கண்காணிப்பு வலையில் சிக்கிய 60 ஆயிரம் பேரிடம் இருந்து 9.42 லட்சம் அபராதம் பெறப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறியது தொடர்பாக 60 மாநகர பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகர பஸ் கழகத்திடம் இருந்து மட்டும் 9.42 லட்சம் பெறப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறுவோரிடம் இருந்து அபராதம் வசூலிப்பதில் முறைகேடுகள் ஏற்படாமல் தடுக்க, ஆன்லைன் முறையில் (இ-சலானிங்) அபராதம் செலுத்தும் புதிய வசதி இன்னும் 3 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும்.

மேலும் கிரெடிட் கார்டு, வங்கிக் கணக்கு மூலமும் அபராதத் தொகையை செலுத்த வசதி செய்யப்படும.

source : Dinamani