Nagaratharonline.com
 
அமெரிக்க விசா: எந்தத் தூதரகத்திலும் விண்ணப்பிக்கலாம்  Nov 19, 10
 
அமெரிக்க விசா கோருபவர்கள் இந்தியாவில் உள்ள தூதரகம், துணைத் தூதரக அலுவலகங்களில் எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கத் தூதரக அலுவலகம் தில்லியில் உள்ளது. மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் அமெரிக்கத் துணைத் தூதரக அலுவலகங்கள் உள்ளன.

அமெரிக்க விசா கோருபவர்கள் இதில் எந்த அலுவலகத்தில் வேண்டுமானாலும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இதுவரை, விண்ணப்பதாரர் வசிப்பிடத்துக்கு ஏற்றவாறு, குறிப்பிட்ட துணைத்தூதரகத்திலோ, தூதரகத்திலோதான் விசா கோரி விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கத

தில்லி தூதரகம்: பிகார், தில்லி, மத்தியப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தராஞ்சல், உத்தரப் பிரதேசம்.

மும்பை துணைத்தூதரகம்: கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், டையூ - டாமன், தாத்ரா - நகர் ஹவேலி.

ஹைதராபாத் துணைத்தூதரம்: ஆந்திரப் பிரதேசம், ஒரிசா.

சென்னை துணைத்தூதரகம்: கர்நாடகம், கேரளம், புதுச்சேரி, லட்சத்தீவுகள், தமிழ்நாடு, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள்.

கொல்கத்தா துணைத்தூதரகம்: அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸôம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மணிப்பூர்

source : Dinamani