Nagaratharonline.com
 
பட்டமங்கலம் : குரு பெயர்ச்சி விழா  Nov 19, 10
 
திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு நாளை (நவ.,21) இரவு 11.11 மணிக்கு சிறப்பு தீபராதனை நடக்கும். அன்று இரவு 11.11 மணிக்கு குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். பெயர்ச்சியை முன்னிட்டு பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி காயிலில் ஐம்பொன்னாலான ஆல விருச்சகத்தின் கீழ் தட்சணாமூர்த்தி உற்சவராக எழுந்தருள்கிறார். நாளை மாலை 6 மணி முதல் இரவு 11.11 மணி வரை சிறப்பு ஹோமம் நடைபெறும். மூலவருக்கு தீபராதனை, பின் நடை சாத்தப்படும். நாளை மறுநாள் (நவ.,22) காலை 4 மணிக்கு நடை திறந்து அபிஷேகம் நடைபெறும். பெயர்ச்சியை முன்னிட்டு காரைக்குடி, திருமயம், திருப்புத்தூர், சிவகங்கை, கல்லலில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்

source : Dinamalar