Nagaratharonline.com
 
கல்லல் - பட்டமங்கலம் : கவனிப்பாரற்ற ரோடு  Nov 15, 10
 
திருப்புத்தூர், கல்லல் - பட்டமங்கலம் ரோட்டை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.திருப்புத்தூர் - கல்லல் செல்லும் மக்கள் பட்டமங்கலம் வழியாக எளிதில் செல்கின்றனர். திருப்புத்தூர் - பட்டமங்கலம் ரோடு 2 கி.மீ.தூரம் மட்டுமே புதுப்பித்துள்ளனர். ஆனால், திருப்புத்தூர் - கண்டரமாணிக்கம் ரோட்டில் இருந்து பட்டமங்கலம் விலக்கு ரோடு வரை குண்டும் குழியுமாக உள்ளது.இதுமட்டுமின்றி பட்டமங்கலம்- கல்லல் ரோட்டில் சொக்கநாதபுரம் வரை மோசமாக உள்ளது. மணல் லாரிகளின் அசுர வேகத்தால், ரோடு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. ரோட்டை செப்பனிட வேண்டும்..


source : Dinamalar