Nagaratharonline.com
 
ராமேசுவரத்துக்கு குளிர் கால சிறப்பு விரைவு ரயில்கள்  Nov 13, 10
 
சென்னையில் இருந்து ராமேசுவரம், கோவை, செங்கோட்டை ஆகிய இடங்களுக்கு கூடுதலாக குளிர்கால சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை சென்ட்ரல்- ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் (எழும்பூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழி)- 06009: இந்த ரயில் நவ. 17, 24-ல் பிற்பகல் 2.10-க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 5.20-க்கு ராமேசுவரம் சென்று சேரும். மறு வழித் தடத்தில் இந்த ரயில் (06010) ராமேசுவரத்தில் இருந்து நவ. 18, 25-ல் மாலை 6.15-க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9.30-க்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.

சென்னை சென்ட்ரல்- ராமேசுவரம் சிறப்பு ரயில் (எழும்பூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழி)- 06011: இந்த ரயில் நவ. 22-ல் மாலை 6-மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8-மணிக்கு ராமேசுவரம் சென்று சேரும்.

மறு வழித்தடத்தில் இந்த ரயில் (06012) ராமேசுவரத்தில் இருந்து நவ. 23-ல் மாலை 6.15-க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9.30-க்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.

சென்னை எழும்பூர்- ராமேசுவரம் சிறப்பு ரயில் (06101): இந்த ரயில் நவ. 29-ல் மாலை 6.50-மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8-மணிக்கு ராமேசுவரம் சென்று சேரும்.

மறுவழித்தடத்தில் இந்த ரயில் (06102) ராமேசுவரத்தில் இருந்து நவ. 30-ல் மாலை 6.15-க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.50-க்கு சென்னை எழும்பூருக்கு வந்து சேரும்.

சென்னை எழும்பூர்- ராமேசுவரம் சிறப்பு ரயில் (06103): இந்த ரயில் டிசம்பர் 1-ல் மாலை 3.10-மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 5.20-மணிக்கு ராமேசுவரம் சென்று சேரும்.

மறுவழித்தடத்தில் இந்த ரயில் (06104) ராமேசுவரத்தில் இருந்து டிசம்பர் 2-ல் மாலை 6.15-க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.50-க்கு சென்னை எழும்பூருக்கு வந்து சேரும்.

சென்னை எழும்பூர்- ராமேசுவரம் சிறப்பு ரயில் (06105): இந்த ரயில் டிசம்பர் 3-ல் இரவு 11.30-மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2.05-மணிக்கு ராமேசுவரம் சென்று சேரும்.

மறுவழித்தடத்தில் இந்த ரயில் (06106) ராமேசுவரத்தில் இருந்து டிசம்பர் 4-ல் இரவு 7.15-க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 10-மணிக்கு சென்னை எழும்பூருக்கு வந்து சேரும்.

சென்னை எழும்பூர்- ராமேசுவரம் சிறப்பு ரயில் (06107): இந்த ரயில் டிசம்பர் 5-ல் இரவு 8.20-மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9.05-மணிக்கு ராமேசுவரம் சென்று சேரும்.

மறுவழித்தடத்தில் இந்த ரயில் (06106) ராமேசுவரத்தில் இருந்து டிசம்பர் 6-ல் இரவு 7.15-க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 10-மணிக்கு சென்னை எழும்பூருக்கு வந்து சேரும்.

சென்னை எழும்பூர்- செங்கோட்டை சிறப்பு ரயில் (06111): இந்த ரயில் டிசம்பர் 21, ஜன. 4 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.20-மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.15-மணிக்கு செங்கோட்டைக்கு சென்று சேரும்.

மறுவழித்தடத்தில் இந்த ரயில் (06112) செங்கோட்டையில் இருந்து இந்த ரயில் டிசம்பர் 22, ஜன. 5-ல் மாலை 5.45-க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 6.05-மணிக்கு சென்னை எழும்பூருக்கு வந்து சேரும்.

முன்பதிவு: இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நவம்பர் 13 (சனிக்கிழமை) தொடங்குகிறது.



source : Dinamani