Nagaratharonline.com
 
நகராட்சி ஆகுமா திருப்புத்தூர்: கிடப்பில் பல ஆண்டு திட்டம்  Nov 13, 10
 
திருப்புத்தூர் : திருப்புத்தூர் பேரூராட்சி, பல ஆண்டுகளாக நகராட்சி அந்தஸ்திற்காக காத்திருக்கிறது. இது கடந்த 1970 முதல் பேரூராட்சியாக செயல்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலமாக தேர்வு நிலை பேரூராட்சியாக உள்ளது. தற்போது நகர் முழுவதும் விரிவாக்கம் அடைந்து ஏராளமான குடியிருப்புகள் உருவாகி விட்டன.
ஆனால், வளர்ச்சிக்கு ஏற்ற திட்டங்கள் செயல்படுத்த போதிய நிதி இல்லை. பேரூராட்சியினரால் குறிப்பிட்ட திட்டங்களை மட்டுமே செயல்படுத்த முடிகிறது.



அவசியம்: நகராட்சியாக தரம் உயர்த்துவதன் மூலமே வளர்ச்சி பணிகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதற்கான மக்கள் தொகை, வரி வருவாயையும் உள்ளது. ஆனால் பாதாள சாக்கடை, பஸ் ஸ்டாண்ட், குப்பை கிடங்கு, விளையாட்டு மைதானங்கள் அமைக்க போதிய இடம் இல்லாமல் பணிகள் முடங்கியுள்ளன. சுற்றுப்புற கிராமங்களில் தேவையான பகுதியை இணைக்க வேண்டியது இன்றியமையாதது. எல்லை வரையறை: ஊராட்சிகளின் எல்லையை வரையறுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆய்வு நடந்து வருகிறது. இந்நிலையில் காட்டாம்பூர், வாணியங்காடு, நெடுமரம், ரணசிங்கபுரம் ஊராட்சிகளின் சில பகுதிகளை திருப்புத்தூரில் இணைக்க அமைச்சர் பெரியகருப்பன், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி அந்தஸ்து கிடைக்க தேவையான முயற்சிகளை உடனே துவக்க வேண்டும்

Source:Dinamalar