Nagaratharonline.com
 
பாகனேரியில் செயல்படாத டிரான்ஸ்பார்மர்கள்  Nov 11, 10
 
பாகனேரி : பாகனேரியில் இலவச மின்சாரத்திற்காக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் செயல்படவில்லை. காளைலிங்கம் நகரில் மத்திய அரசின் இலவச மின்சார திட்டத்தில், கடந்த ஆறு மாதத்திற்கு முன் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. நூறுக்கும் மேற்பட்ட ஏழைகள் மின்வசதி பெற முடியும். ஆனால் டிரான்ஸ்பார்மர் செயல்படவில்லை. இங்கு ஏற்கனவே உள்ள மூன்று டிரான்ஸ்பார்மர்களில் சீரான மின் வினியோகம் இல்லை. புதியது செயல்பட்டால் மின் வினியோகம் சீராகும். இலவச திட்டத்தின் கீழ் பனங்குடி, நடராஜபுரத்தில் அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர்களும் காட்சி பொருளாக உள்ளன. ஏழைகளுக்காக திட்டங்களை அரசு அறிவித்தாலும், அதிகாரிகளின் மெத்தனத்தால் முடங்கியுள்ளன. செயல்படாத டிரான்ஸ்பார்மர்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Source:Dinamalar