Nagaratharonline.com
 
கருப்பினத் தலைவர் ஒபாமாவே வருக..வருக'  Nov 7, 10
 
அமெரிக்காவில் கருப்பர் இனத்தை அடிமைத்தளையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆபிரகாம் லிங்கன் விதைத்த உணர்வு விதைக்கு நீரூற்றி உயிர் கொடுத்தவர் மார்ட்டின் லூதர் கிங். லிங்கன் வழி நின்று கருப்பின மக்களின் அடிமைச் சங்கிலியைத் தகர்த்தெறிந்தார்.

கருப்பர்கள் மனிதர்களாவே கருதப்படாத, நீக்ரோக்கள் மனிதர்கள் அல்ல என்று நீதித்துறையால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட அமெரிக்க நாட்டிலே இன்று கென்ய நீக்ரோ தந்தைக்குப் பிறந்த பராக் ஒபாமா அதிபராகி இருக்கிறார்

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மாநாட்டு வாசலுக்கு உள்ளேகூட நுழைய முடியாத ஒபாமாவால், எப்படி அதிபர் சிம்மாசனத்தில் அமர முடிந்தது. தன் சாதனைக்குக் காரணமாக அவர் சொல்வதெல்லாம், "ஆம், நம்மால் முடியும்' என்ற மூன்றே சொற்களைத்தான். தன் நம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் அமெரிக்க அதிபராகிச் சரித்திரம் படைத்த வரலாற்று நாயகன், கருப்பின மக்கள் விடுதலைக்காகப் போராடிய மகாத்மா காந்தி பிறந்த இந்திய மண்ணுக்கு முதல் தடவையாக வருகை தர உள்ளார். ஒபாமாவின் இந்த வருகை அமெரிக்காவைவிட இந்தியாவுக்குத்தான் முக்கியத்துவம் வாய்ந்தது. உறவு ரீதியாக அல்ல, கருப்பினத் தலைவர் என்ற உணர்வுரீதியாக.

இதனால் "உலகக் கருப்பின ஒப்பற்ற தலைவர் ஒபாமாவே வருக..வருக' என்று ஒவ்வொரு இந்தியரும் வாழ்த்தி வரவேற்போம். உரிய வகையில் கெüரவித்து வழியனுப்புவோம்

source : Dinamani