Nagaratharonline.com
 
இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாட ஒபாமா விருப்பம்  Nov 5, 10
 
அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியர்களுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும் என விருப்பம் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.


2009-ம் ஆண்டில் வெள்ளை மாளிகையில் தனிப்பட்ட முறையில் தீபாவளி கொண்டாடிய ஒபாமா, இந்திய மக்களுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாட வேண்டும் என விருப்பம் தெரிவித்ததாக வெள்ளை மாளிகையில் ஆசிய விவகாரங்களுக்கான இயக்குநர் ஜெஃப் பாதர் தெரிவித்தார்.


தற்போது இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக வரும் ஒபாமா,மும்பையில் பள்ளி மாணவர்களுடன் தீபாவளி கொண்டாட உள்ளதாக பாதர் தெரிவித்தார்.

source : Dinamani