Nagaratharonline.com
 
திருப்புவனம்: ரோட்டில் வாரச்சந்தைக்கு தடை  Nov 1, 10
 
திருப்புவனம்:திருப்புவனத்தில் ரோட்டை ஆக்கிரமித்து நடந்த வாரச்சந்தை அகற்றப்பட்டது. கடைகள், சந்தை வளாகத்திற்குள் கொண்டு செல்லப்பட்டன. வாரச்சந்தை செவ்வாய், புதனில் கூடும். சிவகங்கை ரோட்டில் இருபுறமும், ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாரச்சந்தை வளாகத்தில் அடிப்படை வசதி இன்றி வியாபாரிகள் அங்கு செல்ல மறுத்தனர்.வாகன நெருக்கடிக்கு மத்தியில், காய்கறி வாங்கி செல்லும் நிலை இருந்தது. இதுகுறித்து தினமலர் இதழில் செய்தி வெளியிடப்பட்டது.சபாஷ் இன்ஸ்பெக்டர்: போலீசாரும் கடமைக்காக, அவ்வப்போது ஒழுங்குபடுத்தி செல்வர். சமீபத்தில் பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டர் குமார், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி சந்தை வளாகத்திற்குள் வைக்க, வியாபாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார். சரக்கு வாகனங்கள் இடையூறு இன்றி வளாகத்திற்குள் செல்ல ஏற்பாடு செய்தார். சந்தையை போலீசார் மாலை வரை கண்காணித்ததால், ஆக்கிரமிப்பு தடுக்கப்பட்டது. பல ஆண்டாக நீடித்த போக்குவரத்து நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்த இன்ஸ்பெக்டரின் முயற்சி பாராட்டுக்கு உரியது.


Source: dinamalar

nov 01, 2010