Nagaratharonline.com
 
பட்டாசுகளைத் தவிர்ப்போம்; மத்தாப்பூவாய் மலர்வோம்  Oct 31, 10
 
தீபாவளி' இந்துக்களின் பாரம்பரியமான திருவிழா. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக இந்துக்கள் மட்டுமன்றி, மற்ற மதத்தினரும் கொண்டாடும் உற்சாகத் திருநாள். இதற்குக் காரணம் குழந்தைகளை மகிழ்விக்கும் மத்தாப்பூ, சரவெடி, பட்டாசு என வண்ண ஒளியையும் அசாதாரணமான சத்தத்தையும் அள்ளி வழங்கும் திருவிழா, தீபாவளி.

இப்படி எல்லா மதத்தினரையும் வயதினரையும் மகிழவைக்கும் தீபாவளி வனவிலங்கையும், பறவைகளையும் மகிழவைக்கிறதா? என்றால் இல்லை. அவைகளைக் கதற வைக்கிறது என்பதே உண்மை. இதற்குக் காரணம் ஒலி மாசு.

ஒலி அலைகளின் தீவிரமும், அலைவெண்ணும் கலந்ததே உரத்த ஒலியாகும். இதை டெஸிபெல் என்னும் அலகால் அளவீடு செய்வர். டெஸிபெல் என்னும் சொல்லில் உள்ள டெஸி என்பது 10 என்பதைக் குறிக்கிறது. பெல் என்பது தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸôண்டர் கிரஹம்பெல்லைக் குறிக்கிறது

பொதுவாக மூளையைப் பயன்படுத்தி வேலை செய்பவர்களுக்கு ஓசைமாசு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அது கவனச்சிதறலை ஏற்படுத்துவதால், மனதை ஒருமுகப்படுத்துவதில் மிகுந்த சிரமத்தை உண்டாக்குகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனச்சோர்வு உண்டாகி அவர்களுடைய பணித்திறன் குறைகிறது.

பிறந்த சில நாள்களே ஆன குழந்தைகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பலதரப்பட்டவர்களையும் அச்சுறுத்தும் விஷயமாக வெடிச்சத்தம் இருப்பதால் தீபாவளிக்குப் பட்டாசு வெடியைத் தவிர்த்து மத்தாப்பூக்களை கொளுத்தி மகிழ்வோம். ஒலிமாசைக் குறைப்போம்.

source : Dinamani