Nagaratharonline.com
 
தீபாவளிக்கு சிறப்பு ரயில்  Oct 31, 10
 
தீபாவளியை முன்னிட்டு, வரும் 3, 7 ம் தேதி அன்று, சென்னை- ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.சிறப்பு ரயில் இயக்க கோரி காரைக்குடி தொழில் வணிக கழகம் சார்பில், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து ரயில் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி வரும் 3 ம் தேதி இரவு 11.30 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு (வண்டி எண்-633) விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழி, மறு நாள் மதியம் 2.05 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடையும்.வரும் 7 ம் தேதி இரவு 7 மணிக்கு, ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு (வண்டி எண்- 634) மறுநாள் காலை 8.05 மணிக்கு எழும்பூர் சென்றடையும்.இதில் மூன்று அடுக்கு "ஏசி' பெட்டி-1 , தூங்கும் வசதி கொண்ட பெட்டி-4, பொதுப்பெட்டி-6 இருக்கும்.இதற்கு தொழில் வணிக கழக தலைவர் முத்துபழனியப்பன், செயலாளர் சாமிதிராவிடமணி நன்றி தெரிவித்துள்ளனர்.

source : Dinamalar