Nagaratharonline.com
 
திருப்பரங்குன்றத்தில் நாளை பாலாலயம்  Oct 27, 10
 
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக வியாழக்கிழமை (அக். 28) பாலாலயம் நடைபெற உள்ளது.

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஸ்தானிகப் பட்டர்களின் ஆலோசனைப்படி 2011-ம் ஆண்டு கோயில் குடமுழுக்கு செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான முதற்கட்டப் பணியாக வியாழக்கிழமை பாலாலயம் நடைபெற உள்ளது.

காலை 9 மணி முதல் 12 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புன்யாஹ வாசனம்,கணபதி ஹோமம் உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடைபெறும்.

மாலை 5.30 மணி முதல் 8 மணி வரை விக்னேஸ்வர பூஜை நடைபெற்று முதற்கால யாகபூஜை நடைபெற்று மகா தீபாராதனைகள் நடைபெறும்.

வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இரண்டாம் கால பூஜை ஆரம்பமாகும்.

பகல் 12 மணிக்கு பூர்ணாஹூதி நடைபெற்று கலசங்கள் புறப்பாடாகும்.

12.30 மணிக்கு கோயில் ராஜகோபுர விமான பாலாலய கும்பாபிஷேகம் நடைபெறும்.

source : Dinamani