Nagaratharonline.com
 
சிலம்பாட்ட போட்டி: நெற்குப்பை அணி சாம்பியன்  Oct 21, 10
 
திருப்புத்தூரில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் நெற்குப்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது.சிலம்பாட்ட கழக மாவட்ட தலைவர் அறிவுதிலகம் தலைமை வகித்தார்.

இதில், நெற்குப்பை அணி 15 புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. திருப்புத்தூர் பேரூராட்சி தலைவர் சாக்ளா பரிசு வழங்கினார். சிலம்பாட்ட கழக மாநில செயல்தலைவர் சந்திரமோகன், மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், ஆர்.எம்.மெய்யப்பச்செட்டியார் மெட்ரிக்., பள்ளி தாளாளர் பழனியப்பன் பங்கேற்றனர்.

source : dinamalar