Nagaratharonline.com
 
காஸ் சிலிண்டர் வினியோகத்தில் டோக்கன் முறை  Oct 19, 10
 
சமையல் காஸ் சிலிண்டர் வினியோகத்தில், நுகர்வோருக்கு டோக்கன் வழங்கும் முறை சிவகங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட இடங்களில் ஏழு காஸ் ஏஜென்சிகள் உள்ளன. வீடுகளில் பயன்பாட்டிற்காக மத்திய அரசு மானிய விலையில் காஸ் சிலிண்டர்களை வழங்குகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி வீடுகளில் பயன்படுத்தும் சிலிண்டர்களை கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. இந்த சிலிண்டர்கள் ஓட்டல், பேக்கரி, திருமண மண்டபங்கள், வாகனங்களில் பயன்படுத்துகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு சிலிண்டர் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது.



வீட்டில் பயன்படுத்தவேண்டிய சிலிண்டர்களை வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்துகின்றனர். இதை மாவட்ட வழங்கல் அலுவலர்கள் கண்டும் காணாமல் உள்ளனர். இதனால், வீடுகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டருக்கு செயற்கையான தட்டுப்பாடு நிலவுகிறது. இது குறித்து சிவகங்கை இண்டேன் காஸ் ஏஜன்சி உரிமையாளர் மணிமுத்து கூறுகையில், ""ஒவ்வொரு சந்தாதாரருக்கும் ஆண்டிற்கு பத்து டோக்கன் தரப்படும். வாடிக்கையாளருக்கு நேரடியாக சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யவே இத்திட்டம். டோக்கன் பெற்ற பின் ஒவ்வொரு மாதமும் தடையின்றி சிலிண்டரை பெறலாம். இதில் முறைகேட்டிற்கு வாய்ப்பில்லை என்றார்.


source : Dinamalar