Nagaratharonline.com
 
கேம்பஸ் இன்டர்வியூ : 19/10/2010  Oct 16, 10
 
மேலூர் : லதா மாதவன் பாலிடெக்னிக்கில் அக். 19ல் சென்னையில் உள்ள பன்னாட்டு கம்பெனிகளின் கேம்பஸ் இன்டர்வியூ நடைபெற உள்ளது. 2008,09,10 ஆண்டுகளில் எந்த பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த மாணவர்களும் இதில் கலந்து கொள்ளலாம். மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல், எலக்ட்ரிகல் பிரிவில் டிப்ளமோ பெற்றவர்கள் தங்களது சான்றிதழ்கள், நகல்கள், போட்டோ, பயோடேட்டாவுடன் அக். 19 காலை 9 மணிக்குள் கல்லூரி வளாகத்திற்கு வர வேண்டும். தேர்வு பெறும் மாணவர்களுக்கு மாத சம்பளம் 10 ஆயிரம் ரூபாய், முதல் வருடத்தில் வழங்கப்பட உள்ளது. பாலிடெக்னிக் முதல்வர் பன்னீர்செல்வம், வேலை வாய்ப்பு துறை அலுவலர் சாந்தகுமார் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும் விபரங்களுக்கு 99429 03933, 97509 55886ல் தொடர்பு கொள்ளலாம்