Nagaratharonline.com
 
கீழச்சிவல்பட்டி, தெக்கூர், செவ்வூர் நூலகங்களில் அரிய புத்தகங்கள் பாழாகின்றன  Oct 12, 10
 
மாவட்டத்தில் பெரும்பாலான நூலகங்கள், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்களில் செயல்படுகின்றன. மழை நீர் கசிவு, கரையான் பாதிப்புகளால் அரிய புத்தகங்கள் பாழகி வருகின்றன.


இங்கு 42 கிளை நூலகங்கள், 48 ஊர்புற நூலகங்கள், 20 பகுதி நேர நூலகங்கள் உள்ளன. இவற்றில் திருவேகம்புத்தூர், கீழச்சிவல்பட்டி, தெக்கூர், செவ்வூர், கண்ணங்குடி பகுதிகளில், கிளை நூலங்கள் சேதம் அடைந்த கட்டடத்தில் செயல்படுகின்றன. எஸ்.எஸ்.கோட்டை, பிரான்மலை, சிங்கம்புணரி, புழுதிபட்டி, இடையமேலூர் நூலகங்கள், ஓட்டு கட்டடத்தில் செயல்படுவதால், மழை நீர் புகுந்து புத்தகங்கள் சேதமடைந்து வருகின்றன. "ரேக்' வசதிகள் இல்லாததால் விலை உயர்ந்த புத்தகங்கள் மேஜை, தரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நூலக பதிவேடுகள் வைப்பதற்கும் தனி வசதி இல்லை. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளின் பிடியில் சிக்கி, அரிய புத்தகங்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


source : Dinamalar