Nagaratharonline.com
 
தேவகோட்டைதெருக்கள் எங்கும் கழிவுநீர் குட்டை  Oct 12, 10
 
கோமா நிலையில் உள்ள சுகாதார பணிகளால் தேவகோட்டை மக்கள் அவதிப்படுகின்றனர்.இங்குள்ள 27 வார்டுகளிலும் கழிவுநீர் முறையாக செல்வதில்லை. மாந்தோப்பு வீதி விரிவாக்க பகுதியில் ரோடு முழுவதும் கழிவுநீர் ஒடுகிறது. மின் வாரிய ரோட்டில் தனியார் பள்ளி எதிரில், கழீவுநீர் தேங்கி கொசு உற்பத்தி நிலையமாக இருக்கிறது. மேலவயல் கண்மாய்க்கு செல்லும் கால்வாயை சிறிதாக்கி, நகராட்சியினரே கான்கீரிட் அமைத்துள்ளனர். அதில் கடைகளுக்கு வாடகைக்கு விட தீர்மானித்தனர். ஆனால் தற்போது திறந்த வெளி கழிப்பிடமாக மாறி விட்டது. போக்குவரத்து மிக்க தியாகிகள் ரோட்டில், சிறு மழைக்கே ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்குகிறது.



வாடியார் வீதியில் துர்நாற்றத்தால், மூக்கை பிடித்து செல்லும் நிலை. முத்தாத்தாள் பள்ளி அருகே கால்வாய் தூர்வாரப்படாமல், ரோட்டில் மழைநீர் தேங்குகிறது. அண்ணா சாலையில் கழிவுநீர் குட்டையாக தேங்கியுள்ளது.கோமா நிலை: இவை எல்லாம் நகரில் சில உதாரணங்கள் தான். நகராட்சியில் சுகாதார பிரிவு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. வருமானம் கொழிக்கும் கான்ட்ராக்ட் பணிகள் மட்டுமே நடக்கின்றன. சுகாதார பணிகள் கோமா நிலையில் முடங்கி விட்டன. சுகாதாரம், குடிநீர் உள்ளிட்டவைகளும் மக்களின் அடிப்படை வசதிகள் என்பதை அதிகாரிகள் மறந்து விட்டார்களோ என ஆதங்கம் நிலவுகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து, அதிகாரிகள் இனியாவது கண் விழிக்க வேண்டும்.



source ; dinamalar