Nagaratharonline.com
 
How to get gas (LPG) connection for our houses ?  Oct 10, 09
 
வீட்டு உபயோகத்துக்காக பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் போன்ற பெட்ரோலிய நிறுவனங்கள் 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோ கிக்கின்றன. சில பகுதிகளில் குறிப் பாக மலைப் பகுதிகளில் ஐந்து கிலோ எடையுள்ள சிலிண்டர்கள் கிடைக்கின்றன.

புதிய சமையல் எரிவாயு இணைப்பு தேவைப்படுபவர்கள் உங்கள் வசிப்பிடத்துக்கான ஆதா ரத்தை எடுத்துக் கொண்டு, தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கேஸ் சிலிண்டர் விநியோகஸ்தரிடம் செல்ல வேண்டும். ரேஷன் கார்டு, மின்சார வாரிய பில், டெலிஃபோன் பில், பாஸ்போர்ட், மத்திய, மாநில, அரசுத் துறை நிறுவனங்களில் வேலை பார்த்தால் அலுவலகம் வழங்கும் வசிப்பிட சான்றிதழ், வாக்காளர் அட்டை, வருமான வரித்துறை வழங்கும் பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் போன்றவை வசிப்பிடத் துக்கான ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளப்படும்.

சமையல் எரிவாயு பெறுவதற்குரிய விண் ணப்பத்தைப் பூர்த்தி செய்து, வசிப்பிட ஆதாரத் தின் பிரதியை இணைத்து, கேஸ் சிலிண்டருக்கான செக்யூரிடி டெபாசிட் தொகையாக ரூ. 1250/- மற்றும் ரெகுலேட்டருக் கான கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். கூடுதலாக 1250 ரூபாய் டெபாசிட் செலுத்தி, கூடுதல் சிலிண்டர் ஒன்றை பெற்றுக் கொள்ள லாம். ஒரே முகவரியில் இரண்டு சிலிண்டர்கள் வைத் துக் கொள்ளலாம். அடுத்த சில நாட்களில் சமையல் எரிவாயு இணைப்பு உங்கள் வீடு தேடி வந்துவிடும்.

ஒரே வீட்டில் இரண்டு பெயர்களில் இரண்டு கனெக் ஷன் பெறுவது விதிகளுக்குப் புறம்பானது.

கேஸ் விநியோகஸ்தர் விற்பனை செய்யும் கேஸ் அடுப்பைத்தான் வாங்க ணுமா?

கேஸ் விநியோகஸ்தரிடம்தான் அடுப்பை வாங்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. உங்களுக்குப் பிடித்த மாடலில் அடுப்பை எங்கிருந்து வேண்டு மானாலும் வாங்கிப் பயன்படுத்தலாம். ஆனால் கேஸ் அடுப்பும், ரெகுலேட் டரையும் கேஸ் சிலிண்டரையும் இணைக் கும் ரப்பர் குழாயும் ஐ.எஸ்.ஐ. தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம். விலை குறைவு என்று தரமற்ற வற்றை வாங்கிப் பயன்படுத்தினால் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் கிடை யாது.

கேஸ் கனெக்ஷன் கொடுக்கும்போது, வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் செக்யூரிடி டெபாசிட்டுக்கான ரசீதுக்கு, `சப்ஸ்கிருப்ஷன் வவுச்சர்' என்று பெயர். இதை மிகப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் னர் கேஸ் கனெக் ஷனை வேறு ஊர் களுக்கு மாற்ற வேண் டிய அவசியம் ஏற்பட்டாலோ, கனெக்ஷன் அவசியமில்லை என்று திருப்பிக் கொடுத்தாலோ இந்த வவுச்சர் அவசியம். கூடவே, ஒரு பாஸ்புக்கும் கொடுப்பார்கள். இதற்கு புளூ புக் என்றும் பெயர். இதில் ரீஃபில் சிலிண்டர் விநியோகித்த தேதி உள்ளிட்ட கேஸ் கனெக்ஷன் பற்றிய அனைத்து விவரங்களும் குறித்து வைக்கப் பட வேண்டும். மேலும் உங்கள் கேஸ் கனெக்ஷன் குறித்த பாதுகாப்புக் குறிப்புகள் அடங்கிய கையேடும் உங்களுக்கு வழங் கப்படும்.

வீடு மாறும்போது என்ன செய்யணும்?

நீங்கள் வீடு மாறுவது, உங்களுடைய தற்போதைய சமையல் எரிவாயு விநி யோகஸ்தரது விநியோகப் பகுதிகளிலேயே என்றால், உங்கள் புதிய முகவரியை ஆதாரத்துடன் தெரிவித்தாலே போது மானது. அடுத்த முறை ரீஃபில் சிலிண் டருக்குப் பதிவுசெய்தால், உங்கள் புதிய முகவரியிலேயே விநியோகிக்கப்படும்.

source : mangayar malar Oct 2009