Nagaratharonline.com
 
தேசிய ஹாக்கி போட்டி: தமிழக அணிக்கு சிவகங்கை வீரர் தேர்வு  Sep 27, 10
 
சிவகங்கை, செப்.26: மகாராஷ்டிர மாநிலம், புனேயில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான ஹாக்கி போட்டிக்கு, தமிழக அணியில் விளையாட சிவகங்கை வீரர் பூ.சங்குமணிகண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய அளவிலான ஹாக்கி போட்டிக்கு 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சென்னை ஓய்.எம்.சி.ஏ கல்லூரி மைதானத்தில் தமிழக ஹாக்கி அணி தேர்வு நடைபெற்றது.

இந்தத் தேர்வில் தமிழகத்தில் இருந்து சுமார் 85 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில், சிவகங்கை மன்னர் கல்லூரியில் பொருளியல் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் பூ.சங்குமணிகண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அணியின் தேர்வாளராக தமிழக ஹாக்கி சங்கச் செயலாளர் கே. ஜோதிகுமார், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் வி. பாஸ்கரன், சென்னை மாவட்ட ஹாக்கி சங்கச் செயலாளர் எஸ்.ஆர். பாஸ்கரன் ஆகியோர் செயல்பட்டனர்.

தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்ட பூ.மணிகண்டனை மன்னர் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எஸ். பரமசிவம், உடற்கல்வி இயக்குநர் (பொறுப்பு) மாரிமுத்து, நேஷனல் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் ஒருங்கிணைப்பாளர் கே. மோகன்தாஸ் மற்றும் சிவகங்கை மாவட்ட ஹாக்கி சங்க நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், செந்தில், சங்கரன், சேதுராமன் ஆகியோர் பாராட்டினர்

Source:Dinamani