Nagaratharonline.com
 
ப. சிதம்பரம் பிறந்த நாள் விழா: காரைக்குடி அருகே கபடிப் போட்டி  Sep 22, 10
 
காரைக்குடி, செப். 21: மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பிறந்த நாள் விழாவையொட்டி, காரைக்குடி அருகே நடுவிக்கோட்டையில் கபடிப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் என். சுந்தரம் துவக்கி வைத்தார்.

கல்லல் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ராம. பெருமாள், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் பிஎல். காந்தி, காங்கிரஸ் மாவட்டப் பொதுச் செயலாளர் கேஆர். அழகேசன், சங்கராபுரம் ஊராட்சித் தலைவர் எஸ். மாங்குடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

போட்டியில் 30-க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடின. இதில் வெளியாரி சேகர் நினைவுக் குழு அணி முதல் பரிசைத் தட்டிச் சென்றது.

நடுவிக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ், ராஜா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Source:Dinamani