Nagaratharonline.com
 
கல்லலுக்கு தேவை அரசு மருத்துவமனை  Sep 6, 10
 
கல்லலில் அரசு மருத்துவமனை இல்லாததால், கிராமத்தினர் மருத்துவ வசதியின்றி அவதிப்படுகின்றனர். கல்லல் ஒன்றியத்தில் 33 ஊராட்சிகள் உள்ளன. முற்றிலும் கிராமங்கள் நிறைந்த இங்கு அரசு மருத்துவமனை, சுகாதார நிலையம் இல்லை.தனியார் மருத்துவமனைகளும் இல்லை. இதனால் ஏழு கி.மீ., ல் உள்ள செம்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லவேண்டியுள்ளது. கல்லலில் ஒன்றிய மருத்துவமனை செயல்பட்டது. டாக்டர், நர்ஸ், ஊழியர்களுக்கு சம்பளம் தரும் குளறுபடியால், 15 ஆண்டுக்கு முன் மூடப்பட்டது. இதனால், மருத்துவ வசதியின்றி கிராமத்தினர் அவதிப்படுகின்றனர். மகப்பேறு சிகிச்சைக்காக சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அலைய வேண்டிய அவலம் உள்ளது. கிராமத்தினரின் வசதிக்காக கல்லலில் அரசு மருத்துவமனை துவக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் முயற்சி எடுப்பார்களா?


source : Dinamalar