Nagaratharonline.com
 
NEWS REPORT: வீட்டு வாடகை ஒப்பந்தத்தில் என்னென்ன விஷயங்கள் குறிப்பிடப்பட வேண்டும்?  Sep 5, 10
 
வழக்கமான அடிப்படையான விஷயங்களுடன், வாடகை, அட்வான்ஸ் எவ்வளவு? (தங்கள் இஷ்டப்படி ஆறு, பத்து மாத அட்வான்ஸ் வாங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை என்பதால், இப்போ தெல்லாம் வீட்டைக் காலி செய்யும்போது திருப்பித் தரக்கூடிய செக்யூரிடி டெபாசிட் என்று குறிப்பிட்டு விடுகிறார்கள்) பரா மரிப்புத் தொகை எவ்வளவு? அதை யார் செலுத்த வேண்டும்? வாடகையை எப்படி செலுத்த வேண்டும்? வீட்டில் என்னென்ன வசதிகள் செய்து தரப்படும்? காலி செய்ய வேண்டும் என்றால், எத்தனை மாதம் முன்னால் நோட்டிஸ் கொடுக்க வேண்டும்? சொத்து, தண்ணீர் வரிகளை யார் கட்ட வேண்டும்? போன்ற விஷயங்கள் தவறாமல் இடம் பெற்றால், பின்னர் சர்ச்சைகளுக்கு இடமில்லாமல் போகும்.



நீங்கள் ஒருவருக்கு உங்கள் வீட்டை வாடகைக்குக் கொடுத்தால், அதை அவர் வேறு ஒருவருக்கு சப்-லீசுக்கு விடக்கூடாது என்ற கண்டிஷனும் போடுவதுண்டு. ஒப்பந்தம் போடுகிறபோதே, வீடு அல்லது கட்டடம் குடியிருக்க கொடுக்கப் படுகிறதா? அல்லது பிசினஸ் செய்வதற்காகக் கொடுக்கப்படுகிறதா? என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

ஒருவர் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுகிறார் என்றால் அதையே காரணமாகக் காட்டி, ஒப்பந்தத்தை ரத்து செய்து, வீட்டை விட்டு வெளியேற்றலாம். அல் லது ஒருவர் வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டை தன்னுடைய சொந்த உபயோகத்துக்குத் தேவை என்று சொல்லியும் ஒப்பந்த விதிகளின்படி வீட்டை காலி செய்யச் சொல்லலாம். அரசாங்க அலுவலகங்களுக்காக வீட்டை அல்லது கட்டடத்தை வாடகைக்குக் கொடுக்கும்போது ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும். ஆனால், அரசாங்க அலுவலகத்தை அவ்வளவு சீக் கிரம் காலி செய் யும்படி சொல்ல முடியாது. சட்டத்திலேயே இதற்குரிய விதிமுறைகள் உள்ளன.

வழக்கமாக எல்லா மாவட்டங்களிலும் வாடகை கட்டுப்பாடு நீதிமன்றங்கள் இருக்கும். வாடகை தரவில்லை. சொந்தத் தேவைக்கு வீடு தேவைப் படுகிறது போன்ற காரணங்கள் தவிர, இவர்கள் இங்கே இருப்பதால் அக்கம் பக்கத்தினருக்குப் பிரச்னையாக உள்ளது என்ற காரணத்துக்காகக்கூட காலி செய்யச் சொல்லி கோர்ட்டுக்குப் போகலாம். வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, குடி வராமல் பூட்டியே வைத்திருந் தாலும் வீட்டை காலி செய்யச் சொல்லலாம்.

சில சமயம் வாடகை கொடுத்தால் அதை வாங்க மறுத்துவிட்டு, ‘வாடகை ஒழுங்காகத் தரவில்லை; வீட்டைக் காலி செய்ய கோர்ட் உத்தரவிட வேண்டும்’ என்று கோரி வீட்டின் சொந் தக்காரர், கோர்ட்டுக்குப் போவார். அது போன்ற தருணங்களில், குடி இருப்பவர் தான் ஒழுங்காக வாடகை செலுத்தி வருவதை கோர்ட்டில் நிரூபிக்க வேண்டும். வீட்டு சொந்தக்காரர் வாடகையை வாங்கிக் கொள்ள மறுத்தால், ரிஜிஸ்டர்ட் தபால் மூலம் செக் அல்லது மணி ஆர்டர் மூலமாக வாடகையைக் கொடுக்கலாம். வீட்டுச் சொந்தக்காரர் அதை வாங்கிக் கொள்ள மறுக்கும்போது அதுவே அவருக்கு எதிரான சாட்சியாகிவிடும். கோர்ட் அனுமதியுடன் வாடகையை கோர்ட்டில் கட்டவும் வழி இருக்கிறது.

source : Mangayar Malar