Nagaratharonline.com
 
திருப்புத்தூரில் இலவச ஆம்புலன்ஸ் வசதி துவக்கம்  Oct 7, 09
 
திருப்புத்தூரில் 'நவீன ' வசதி கொண்ட இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டது.திருப்புத்தூர் சுற்று வட்டாரத்தினர் ரோடு, வீடு, தெரு போன்ற இடங்களில் நடைபெறும் வாகன விபத்து, தீ விபத்து, மற்றும் அசாம்பாவிதங்களின் போது பொதுமக்களுக்கு அவசர உதவிக்கு இந்த ஆம்புலன்சை பயன் படுத்தலாம். பக்கவாதம், விஷத்தின் அறிகுறிகள், பிரசவம், தாய்,சேய் நலம், நீரில் மூழ்குதல், மிருக, பாம்பு கடி, மூச்சுத்திணறல், உணவு விஷம், தற் கொலை, குற்ற சம்பவங்கள், பெண்களை கேலி செய்தல் போன்ற அவசர காலங்களில் அழைக்கலாம். 108 என்ற எண்ணுக்கு மொபைல், லேண்ட் லைன் மூலம் அழைப்பு விடுக்கலாம்.




இந்த அழைப்பு இலவசம். போன் செய்பவர் பெயர், ஊர், வரவேண்டிய இடம், அவசரத்திற்கான காரணம் போன்றவற்றை தெளிவாக தெரிவிக்க வேண்டும். அழைத்த 20 நிமிடங்களில் அவசர ஆம்புலன்ஸ் சம்பந்தப் பட்ட இடத்திற்கு சென்றடையும். இந்த சேவைக்கு யாரிடமும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 24 மணி நேரமும் செயல்படக் கூடியது. ஒரு ஆஸ்பத்திரியிலிருந்து மற்றொரு ஆஸ்பத்திரிக்கு செல்லவும் இந்த வசதியை பயன்படுத்தக்கூடாது.தமிழக அரசின் நிதியுதவியுடன் ஹைதராபாத் நிறுவனமான எமர்ஜென்சி மேனேஜ்மெண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியுட் இந்த சேவையை சென்னையில் கால் சென்டர் மூலம் நிர்வகிக்கிறது. மருத்துவ பயிற்சி பெற்ற இந்த ஆம்புலன்ஸ் உதவியாளர் மற்றும் டிரைவருக்கு தேவையான உத்தரவுகள், ஆலோசனைகள் இந்த கால் சென்டர் மூலம் பிறப்பிக்கப்படும்

source : Dinamalar 7/10/09