Nagaratharonline.com
 
அம்மன்பட்டி, காடனேரி ஊராட்சிகள்: மறு சீரமைப்பு தேவை  Aug 24, 10
 
பாகனேரி : அம்மன்பட்டி, காடனேரி ஊராட்சி எல்லை கிராமங்களை பிரித்து, மறுசீரமைக்க வேண்டும். அம்மன்பட்டி கிராம ஊராட்சியில், அம்மன் பட்டி, கொட்டாப்பட்டி, வெள்ளஞ்சன்பட்டி, இலந்தமங்களம் கிராமங்கள் உள்ளன. அம்மன் பட்டி தவிர்த்து பிற கிராமங்களுக்கு 13 கி.மீ., தூரம் செல்லவேண்டியுள்ளது. அதே போன்று காடனேரி ஊராட்சியில், காடனேரி, மாங்காட்டுபட்டி, தெற்குபட்டி கிராமங்கள் உள்ளன. இதில், காடனேரி தவிர்த்து, பிற கிராமங்களுக்கு 10 கி.மீ., தூரம் செல்லவேண்டும். இதனால் கிராமத்தினர், சான்று, வீடு, குடிநீர் வரி கட்டுவதற்காகவும், பிற அடிப்படை வசதிகளை கேட்க ஊராட்சி அலுவலகம் செல்ல முடியாமல் அவதிபடுகின்றனர். இங்கு செல்ல 2 பஸ்கள் மாறி செல்லவேண்டும்.



வேலை உறுதி திட்ட வேலைக்கு செல்வோர் பஸ் வசதியின்றி மினி வேன்களில் பத்து ரூபாய் கட்டணம் செலுத்தி செல்கின்றனர். இப்பகுதியில் பாதுகாப்பற்ற வேன் பயணத்தால் விபத்து அபாயம் உள்ளது. இது தவிர, ஒரே கிராம ஊராட்சியை சேர்ந்தவர்கள், மின்கட்டணம் செலுத்தவோ, தெருவிளக்கு புகார்களை தெரிவிக்க மூன்று மின்வாரிய அலுவலகத்திற்கு செல்லவேண்டும். இது போன்ற பிரச்னைகளை தீர்க்க கொட்டாப்பட்டி, வெள் ளஞ்சம்பட்டி, துருவம்பட்டியை இணைத்து தனி ஊராட்சி; இளந்தமங்கலம், மாங்காட்டுபட்டி, தெற்குபட்டியை இணைத்து தனி ஊராட்சி ஏற்படுத்த வேண்டும்.

Source: Dinamalar 24th Aug, 2010