Nagaratharonline.com
 
மாணிக்கம் செட்டியார் கொலை :அடகு வைத்தவரை தேடும் போலீஸ்  Aug 22, 10
 
மதுரை மேலமாசிவீதி பகுதி மேலப்பாண்டியன் அகிழ் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் செட்டியார்(64). வீட்டில் நகை அடகு கடை நடத்தி வந்தார். மனைவி சிகப்பிஆச்சி ஆக.,19ல் திருப்பதி சென்ற நிலையில், மாணிக்கம் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று முன் தினம் காலை வீட்டில், அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம் எவ்வளவு என்பது குறித்த கணக்கெடுப்பு, இன்று துணை கமிஷனர் ஜெயஸ்ரீ தலைமையில் நடக்கிறது.துப்பு துலங்கியது: யார், யார் நகை அடகு வைத்துள்ளனர்; நகை மீட்ட நாள் என அனைத்து விபரங்களையும் மாணிக்கம் செட்டியார் குறித்து வைத்திருந்தார். இது கொலையாளிகளை பிடிக்க, போலீசாருக்கு உதவியாக இருக்கிறது. ஆக.,20 இரவு நகை அடகு வைப்பது போல், சிலர் மாணிக்கம் வீட்டிற்கு வந்துள்ளனர். அதில் ஒருவர், அடிக்கடி நகை அடகு வைப்பதும், மீட்பதுமாக இருந்ததால், ஏற்கனவே மாணிக்கத்துடன் நல்ல அறிமுகம் இருந்துள்ளது. இதனால்தான் மாணிக்கம், அந்த நபருடன் வந்தவர்களை வீட்டினுள் அனுமதித்து பேசியிருக்கிறார். இதை பயன்படுத்தி அவரை கொலை செய்து, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நகை அடகு குறித்து மாணிக்கம் எழுதி வைத்திருந்த நோட்டை போலீசார் ஆய்வு செய்தபோது, அந்த குறிப்பிட்ட நபர் பற்றி தெரியவந்தது. அவரை வீட்டில் தேடியபோது தலைமறைவாயிருப்பதை தொடர்ந்து, அவர்தான் கொலையாளி என போலீசார் முடிவு செய்தனர். இதற்கிடையே, சிகப்பி ஆச்சி மற்றும் இளைய மகன் பெரியண்ணன் நேற்று காலை மதுரை வந்தனர். மாணிக்கம் வீட்டை கமிஷனர் பாலசுப்பிரமணியன் ஆய்வு செய்த பின், குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


source : Dinamalar