Nagaratharonline.com
 
கோட்டையூரில் 1.5 ஏக்கர் நில மோசடி  Aug 12, 10
 
காரைக்குடி அருகே கோட்டையூரில் 66 லட்ச ரூபாய் மதிப்புள்ள, 1.5 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக, அ.தி.மு.க., செயலாளர், அவரது தந்தை கைது செய்யப்பட்டனர். இங்குள்ள பாரிநகரை சேர்ந்தவர் வீரப்பன். "சிட்கோ' வில் துணை பொது மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது தந்தை ராமநாதன், 1970 ல், இங்குள்ள சீனி அம்பலத்திற்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை வாங்கினார். அதற்கு முன், இது ராமச்சந்திரன் (58) என்பவருக்கு சொந்தமான நிலம். இதற்கிடையே, இந்நிலத்தை பழைய பத்திரங்களின் அடிப்படையில், கடந்த 23 ம் தேதி, ராமச்சந்திரன், தனது மகன் பாலசுப்பிரமணியனுக்கு (41) பவர் பத்திரம் எழுதி கொடுத்தார். அவர் கடந்த 2 ம் தேதி அந்த நிலங் களை, 66. 83 லட்ச ரூபாய்க்கு, க.வேலங் குடியை சேர்ந்த சதீஷ், காண்ட்ராக்டர் ராமசந்திரனுக்கு விற்று, பத்திரம் எழுதி கொடுத் தார். இதை அறிந்த வீரப்பன், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி., மாரியப்பன், இன்ஸ்பெக்டர் பெரியகருப்பன் விசாரித்தனர். நில மோசடியில் ஈடுபட்டதாக ராமச்சந்திரன், பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர். பாலசுப்பிரமணியன் அ.தி.மு.க., கிளை செயலாளராக உள்ளார்

source : Dinamalar