Nagaratharonline.com
 
பாகனேரி வழியாக பஸ்இயக்க கோரிக்கை  Aug 4, 10
 
காரைக்குடி- மதுரை செல்லும் அரசு பஸ்சை, பாகனேரி வழி இயக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரைக்குடியில் இருந்து காலை 7.15 மணிக்கும், பிற்பகல் 1.15 மணிக்கும் கல்லல், சொக்கநாதபுரம், மதகுபட்டி வழி மதுரை செல்கிறது. பாகனேரிக்கு இந்த நேரத்தில் பஸ் வசதி இல்லை. அதிக பஸ் வசதி இல்லாத இந்த வழி, பஸ்களை இயக்க வேண்டும்.கல்லல், சொக்கநாதபுரம், பாகனேரி வழி இயக்கினால் கீழ, மேலவெள்ளஞ்சன்பட்டி, கொட்டாப்பட்டி, நகரம்பட்டி, அம்மன்பட்டி உள்ளிட்ட 10 கிராம மக்கள், மாணவர்கள் பயன் அடைவர். இந்த வழி, ஐந்து கி.மீ., தூரமே அதிகமாகும். ஆனால் பஸ் வசதியே இல்லாத ஊர்கள் பயன் பெறும். போக்குவரத்து கழகத்திற்கும் வருவாய் அதிகரிக்கும்.


source : Dinamalar