Nagaratharonline.com
 
ரேஷன் கார்டு பெறுவது எப்படி ?  Aug 1, 10
 
எப்படி விண்ணப்பிக்கலாம்?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அதனுடன் இணைக்க வேண்டிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பதாரர் வசிக்கும் பகுதிக்குரிய உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மண் டல உதவி ஆணையாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கோயமுத்தூர் நகரைப் பொருத்தவரை விண்ணப்பங்களை உதவிப் பங்கீட்டு அலுவலரிடம் சமர்ப் பிக்கலாம். மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்குரிய வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து விண் ணப்பத்தைப் பெற்றுக் கொண்டதற்கான அக்னாலட்ஜ் மென்ட் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். மேலும் அந்த அக்னாலட்ஜ்மென்ட்டில் பதிவு எண், விண்ணப்பதாரரது பெயர் மற்றும் முகவரி, விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட நாள் ஆகிய தகவல்கள் இடம் பெற்றுள்ளனவா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பத்தை நேரில் சென்றுதான் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டாய மில்லை. தபால் மூலமும் அனுப்பி வைக்கலாம். அப்படி அனுப்பும் பட்சத்தில், பதிவுத் தபாலில் ஒப்புகை அட்டையுடன் (அக்னாலெட்ஜ்மென்ட் டியூ) அனுப்பி வைப்பது நல்லது. விரைவில் ஆன்லைனிலேயே ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வசதியும் வரவிருக்கிறது.

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப் பிக்கும்போது உடன் இணைக்க வேண்டிய டாக்குமென்ட்ஸ் என்னென்ன?
விண்ணப்ப பாரத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து, கையெழுத்து அல்லது இடது கை பெருவிரல் ரேகை இட்டு நீங்கள் தற்போது வசிக்கும் விலாசத்துக்கான ஆதாரத்தின் நகலை இணைக்க கவண்டும். இது தேர்தல் கமிஷன் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை, சொந்த வீடாக இருந்தால், நடப்பு ஆண்டுக்கான சொத்து வரி கட்டிய ரசீது, லேட்டஸ்ட் டெலிஃபோன் பில், மின்சார வாரியத்தின் பயனீட்டு அட்டை, வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கம், பாஸ்போர்ட் போன்றவற்றில் எதுவாகவும் இருக்கலாம். தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வீட்டில் வசிப்பவர் என்றால், அதற்கான ஒதுக்கீட்டு ஆணை, வாடகை வீடு என்றால் வாடகை ஒப்பந்தப் பத்திரத்தின் நகலை இணைக்கலாம். இதனுடன், பாஸ்போர்ட், புகைப்படப் பிரதி, வீட்டில் கேஸ் கனெக்ஷன் இருந்தால், யாருடைய பெயரில் கேஸ் இணைப்பு உள்ளது, கேஸ் சப்ளை செய்யும் நிறுவனம் மற்றும் ஏஜென்ஸி விபரம் ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும்

Mangaiyar Malar 2010