Nagaratharonline.com
 
முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி மணி விழா  Jul 29, 10
 
புதுக்கோட்டை, சிவபுரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். ரகுபதியின் மணி விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் எஸ். ரகுபதி - சரோஜா தம்பதிக்கு, மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, மாநில அமைச்சர்கள் கோ.சி. மணி, கே.என். நேரு, பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத் தலைவர் சற்குணபாண்டியன், திமுக மாவட்டச் செயலர் பெரியண்ணன் அரசு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், மாவட்ட ஆட்சியர் ஆ. சுகந்தி, காவல் கண்காணிப்பாளர் பா. மூர்த்தி, திரைத் துறையினர் பஞ்சு அருணாசலம், சித்ரா லெட்சுமணன், எஸ்.ஏ. சந்திரசேகரன், "அபிராமி' ராமநாதன், திருமயம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராமசுப்புராம், நகர்மன்றத் தலைவர்கள் ராமதிலகம் உடையப்பன் (புதுக்கோட்டை), எஸ். மாரியப்பன் (அறந்தாங்கி), முன்னாள் துணைத் தலைவர் ஜாபர்அலி (புதுக்கோட்டை), ஒன்றியக் குழுத் தலைவர்கள் சிவ.வீ. மெய்யநாதன் (அறந்தாங்கி), சுப. துரைராஜ் (திருமயம்), எஸ். ராஜு (பொன்னமராவதி), பொன்ராமலிங்கம் (அரிமளம்), பெர்னத்மேரி (கறம்பக்குடி), கே.பி.கே. தங்கவேல் (திருவரங்குளம்) உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.


source : Dinamani