Nagaratharonline.com
 
பள்ளத்தூர், கல்லல் : டவுன் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்  Jun 28, 10
 
காரைக்குடியில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்து கழக டவுன் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால், பயணிகள் அதிருப்திக்குள்ளாகின்றனர்.நகரில் பழைய, புதிய பஸ் ஸ்டாண்டுகள் உள்ளன. இங்கிருந்து தினமும், பள்ளத்தூர், கல்லல், கடியாபட்டி, முடிக்கரை உட்பட ஏராளமான கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து புதுவயல், கானாடுகாத்தானுக்கு செல்லும் பஸ்களில் காலையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.


காரைக்குடி- ராயபுரம் பஸ்சில் (எண்: 15) 2 ரூபாய் 50 காசுக்கு பதில் மூன்று ரூபாய் வசூலித்தனர். இதற்கு, பயணிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், பஸ்சில் தகராறு ஏற்பட் டது.இது குறித்து பயணி பள்ளத்தூர் சுப்பிரமணியம் கூறியதாவது: ""கானாடுகாத்தானில் இருந்து பள்ளத்தூருக்கு ரூ.2.50 க்கு பதில் மூன்று ரூபாய் வசூலித்தனர். பயணிகள் பலரிடம் இதேபோல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் செல்லும் டவுன் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்,'' என்றார்.அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் பசுபதி கூறுகையில்,"" நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'', என்றார்.

source : Dinamalar